சாலையோரம் நடப்பட்ட திமுக கொடிக்கம்பத்தால் விபரீதம்… விவசாயியின் வாய் கிழிந்து பற்கள் உடைந்த சோகம் ; போலீஸில் புகார்..!!

Author: Babu Lakshmanan
15 December 2023, 12:48 pm

விருதுநகர் ; அருப்புக்கோட்டை அருகே அமைச்சர்களை வரவேற்பதற்காக திருச்சுழி சாலையில் நடப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்த விபத்தில் விவசாயி ஒருவர் பலத்த காயமடைந்தார்.

அருப்புக்கோட்டை அருகே அகரத்துப்பட்டியில் நடந்த திமுக நிர்வாகியின் இல்லத் திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, அவர்களை வரவேற்கும் விதமாக, திருச்சுழி சாலையில் திமுக கொடிக்கம்பங்களும், தோரணங்களும் மற்றும் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், செவல்பட்டி கார்த்திகேயன் நகரைச் சேர்ந்த சண்முகவேல் என்ற விவசாயி அந்த வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பார்க்காத வகையில், சாலையின் ஓரம் நடவு செய்யப்பட்டிருந்த திமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்தது. இதில், வாகனத்தில் சென்று கொண்டிருந்த சண்முகவேலின் முகத்திலேயே பலமாக விழுந்துள்ளது.

இதில், அவரது வாய் கிழிந்து 5 பற்கள் உடைந்தன. இதனால், ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை அங்கிருந்தவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, சண்முகவேலின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 512

    0

    0