அதிமுக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய திமுக .. புதுக்கோட்டையில் நடந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
24 January 2024, 6:31 pm

அதிமுக வைத்த கோரிக்கையை நிறைவேற்றிய திமுக .. புதுக்கோட்டையில் நடந்த ட்விஸ்ட்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருப்புணவாசல் ஊராட்சி உள்ள கண்ணமங்கலம் பகுதியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் பிரச்சனையை தற்போது பதவி ஏற்றுள்ள திமுக அரசு மக்களின் கோரிக்கையை நிறைவேற்றியது.

கடந்த 15 வருடத்திற்கு முன்பு இருந்து பல இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்ற நிலையிலும் தொடர்ந்து தோல்வியை தழுவி வந்த நிலையில் தற்போது அதிமுக ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாண்டி கோரிக்கையை ஏற்று திமுக ஒன்றிய தலைவர் உமாதேவி பரிசீலனை செய்து அப்பகுதியில் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் 1200 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து அப்பகுதி மக்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றினர்.

நிகழ்ச்சியில் ஆவுடையார்கோவில்ஒன்றிய பெருந்துணை தலைவர் பிரியா குப்பு ராஜா. முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேஸ்வரி நரேந்திர ஜோதி ஒன்றிய குழு உறுப்பினர்கள் செந்தில்குமரன் பாண்டி புத்தாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரகுபதி உள்ளிட்ட அப்பகுதி மக்கள் ஏராளமான பூமி பூஜை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டனர்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 403

    0

    0