லிஃப்ட் கொடுப்பதாகச் சொல்லி 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; திமுக பிரமுகர் போக்சோவில் கைது…!!

Author: Babu Lakshmanan
31 May 2024, 12:07 pm

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திமுக தருமபுரி மேற்கு மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் நல பிரிவு ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் முருகேசன் பேக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த 15 வயது சிறுமி இரவு 7 மணியளவில் தனக்கு தலைவலி என தெரிவித்து அரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, பின்பு தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

இதை கண்ட முருகேசன் உறவினர் வீட்டில் நான் விடுகிறேன் என தெரிவித்து சிறுமியை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். முருகேசன் திமுகவில் தர்மபுரி மேற்கு மாவட்ட அமைப்புசாரா நல பிரிவு ஓட்டுநர் அணியில் துணை அமைப்பாளராக உள்ளார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றபோது சிறுமியிடம் தவறுதலாக நடந்து கொண்டுள்ளார் என கூறப்படுகிறது. முருகேசனின் நடவடிக்கைகளை கண்ட இந்த சிறுமி வாகனத்தில் இருந்து இறங்கியபோது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளாராம்.

இது குறித்து தனது தாயிடம் தெரிவித்ததை தொடர்ந்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் அரூர் மகளிர் காவல் துறையினர் முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…