ஒரு பீர் 300 ரூபாயா…? கட்சிக்கு போகும் மாமூல்… ஆடியோவை வெளியிட்டு குமுறிய திமுக நிர்வாகி!!

Author: Babu Lakshmanan
20 May 2023, 4:55 pm

திருப்பூரில் 300 ரூபாய்க்கு பீர் விற்பனை செய்வதாக பல்லடம் நகர செயலாளர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்த திமுக முன்னாள் மாணவர் அணி நிர்வாகியின் ஆடியோ வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சி அருகே இருக்கும் கொக்கரக்கோ என்ற உணவு விடுதியில் மது விற்பனை நடைபெறுவதாகவும், அதில் 300 ரூபாய் வரை ஒரு பீர் விற்பனை நடைபெறுவதாக, அதை குடித்த பல்லடம் மாணவர் அணி திமுக அமைப்பாளர் தட்டிக்கேட்டுள்ளார்.

அப்போது, அவருக்கு மிரட்டல் விடுத்ததாகவும், அதேசமயம் அனைவருக்கும் தான் மாமுல் கொடுப்பதாகவும் கூறி அவரை மன உளைச்சல் மற்றும் கட்சி மீது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும், கட்சி நிர்வாகிக்கு ஒரு பிரச்சனை என்றால் திமுக நகர செயலாளர் ராஜேந்திரகுமார் கண்டுகொள்ளவில்லை என்றும், குற்றச்சாட்டு வைத்து அந்த நபர் ஆடியோவை ஒன்றை வைரலாக்கி உள்ளார்.

இதனால் இப்பகுதியில் சர்ச்சை ஏற்பட்டதுடன், ஏற்கனவே நீதிமன்றமே வன்கொடுமை வழக்கு தொடர்பாக காவல்துறையினருக்கு உத்தரவிட்ட நிலையில், ஜாதி வன்மம், மது, மாமூல் நகராட்சியில் விதிமுறை மீறல், கட்சியினரிடையே அதிருப்தி போன்ற பல்வேறு புகார்கள் எழுந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தேகங்களையும் பரபரப்பையும் இது போன்ற செயல்கள் பல்லடம் நகர திமுகவில் நடைபெறுவதால்முதல்வரின் அவ்வப்போது குமுறல்களை யாருமே கண்டுகொள்வதில்லை என்றும், இது போன்ற செயல்களால் முதல்வருக்கு உச்சகட்ட சங்கடத்தையே ஏற்படுத்தும் நிலை பல்லடத்தில் நிலவுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 451

    0

    0