கடையை தர மறுத்ததால் ஆத்திரம்… மதுபானக் கூடத்தை அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர் ; அதிர்ச்சி சம்பவம்!

Author: Babu Lakshmanan
25 December 2023, 9:20 pm

திருப்பூர்: கடையை தனக்கு தர மறுத்ததால் மதுபான கூடத்தை ஆட்கள் வைத்து அடித்து நொறுக்கிய திமுக பிரமுகர். சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கூடத்தை பாஸ்கரன் என்பவர் நடத்தி வருகிறார்‌. இந்நிலையில் தனக்கு குறிப்பிட்ட இடத்தை தருமாறு திமுக மாவட்ட பொருளாளர் சாமிநாதன் என்பவர் நில உரிமையாளர் சிவசங்கரனை அணுகியுள்ளார்.

அப்போது, அவர்களுக்கு தராமல் பாஸ்கரனே தற்போது நடத்தட்டும் என நிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் சாமிநாதன், தனது ஆட்கள் மூலம் நேற்று இரவு மதுபான கூடத்தை அடித்து உடைத்து சூறையாடி உள்ளனர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!