திமுக ஒன்றிய செயலாளர் கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் ; வண்டலூர் திமுக ஊராட்சி மன்ற தலைவி கைது..!!

Author: Babu Lakshmanan
18 March 2024, 6:49 pm

திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவியை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 29ம் தேதி காரில் சென்று கொண்டிருந்த திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் கொலை வழக்கில் வண்டலூர் ஊராட்சிமன்ற தலைவி கைது செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஊராட்சிமன்ற தலைவி முத்தமிழ் செல்வி விஜயராஜ் முக்கிய நபராக இருந்தது அம்பலமாகியுள்ளது.

முத்தமிழ்ச் செல்வியுடன் அவரது கார் ஓட்டுநர் துரைராஜையும் போலீசார் கைது செய்தனர்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி