திமுக பிரமுகரின் மகன் வெட்டிப் படுகொலை… பட்டப்பகலில் நகராட்சி அலுவலக வளாகத்தில் பயங்கரம்..!! அதிர்ச்சி சிசிடிவி!!

Author: Babu Lakshmanan
15 June 2023, 1:01 pm

செங்கோட்டை நகராட்சி அலுவலகம் முன்பு பட்டப்பகலில் திமுக பொதுக்குழு உறுப்பினரின் மகன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகேயுள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த தம்பதி முருகன் -தமிழ்செல்வி. முருகன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் ராஜேஷ் (25) என்பவர் செங்கோட்டை நகராட்சியில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், ராஜேஷ் இருசக்கர வாகனத்தில் அலுவலகம் வந்தபோது, அவரை அலுவலக வளாகத்தில் மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். இச்சம்பவம் பற்றி தகவலறிந்த உறவினர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சங் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் கொலைக்கான பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://player.vimeo.com/video/836442577?badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • Enai Noki Paayum Thota controversy தனுஷ் இயக்கிய முதல் படம் பா.பாண்டி இல்லையா…உண்மையை உடைத்து பேசிய கெளதம் வாசுதேவ் மேனன்..!