‘அவரு தொகுதி பக்கமே எட்டி பார்த்தது இல்ல’… வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகிக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல்!!!
Author: Babu Lakshmanan21 March 2024, 7:12 pm
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் குறித்து வீடியோ வெளியிட்ட பாஜக நிர்வாகிக்கு திமுக பிரமுகர் கொலை மிரட்டல் விடுத்த சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பள்ளிப்பட்டு வட்டத்தில் பாஜக ஐ.டி விங் நிர்வாகியாக செயல்படுபவர் ஹரி பிரசாத். இவர் தற்போதைய அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய திமுக அரக்கோணம் நாடாளுமன்ற வேட்பாளராக அறிவித்துள்ள ஜெகத்ரட்சகன், திருத்தணி தொகுதி பக்கம் எட்டி பார்க்கவில்லை, பொதுமக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
இதையடுத்து, பாஜக நிர்வாகி ஹரி பிரசாத்தை தொடர்பு கொண்ட தி.மு.க திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி சேர்ந்த விஜயகுமார் என்பவர், ஜெகத்ரட்சகன் அய்யாவை பற்றி பேசுகிறாயா..? உன்னை கொலை செய்து விடுவேன்.. உன்னை தொலைத்து விடுவேன் என்று பகிரங்கமான முறையில் ஆபாச வார்த்தைகளுடன் திட்டி, செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி திருத்தணி தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதனைத் தொடர்ந்து, பாஜக நிர்வாகி ஹரி பிரசாத் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டிய பாஜக நிர்வாகி ஹரி பிரசாத், திருத்தணி டிஎஸ்பி விக்னேஷிடம் புகார் அளிக்க வந்தார்.
ஆனால் இங்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக நிர்வாகியான தனக்கும், தனது குடும்பத்திற்கும், பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.