‘அமைச்சர் வராமல் நடத்தக் கூடாது’… ஜல்லிக்கட்டு போட்டியை நிறுத்தி வைத்த திமுக மாவட்ட செயலாளர்.. பொதுமக்கள் அதிருப்தி!!

Author: Babu Lakshmanan
19 January 2024, 12:10 pm

புதுக்கோட்டையில் அமைச்சர் வராமல் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என்று திமுக மாவட்ட செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படச் செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்தது. கோவில் காளை அவிழ்க்கப்பட்டு வீரர்கள் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.

இந்த விழாவிற்கு முன்னாள் அமைச்சரும், அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் பங்கேற்று இருந்தார். ஆனால், திமுக அமைச்சர் வந்த பிறகு தான் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று கூறி திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன், விழாக்கமிட்டியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது தடைபட்டது. இதன் காரணமாக, மாடுபிடி வீரர்கள் களத்தில் ஆங்காங்கே அமர்ந்து கொண்டனர். திமுக நிர்வாகியின் இந்த செயல் அங்கிருந்தவர்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!