இடையூறு செய்யும் திமுக பிரமுகர்… வீல் சேருடன் மாற்றுத்திறனாளி விவசாயி தீக்குளிக்க முயற்சி ; ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

Author: Babu Lakshmanan
25 September 2023, 12:00 pm

திமுக பிரமுகரின் இடையூறினால் மாற்றுத்திறனாளி விவசாயி மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த நிலக்கோட்டை தாலுகா அம்மையநாயக்கனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜதானி கோட்டையைச் சேர்ந்த துரைப்பாண்டி. இவருக்கு இதே பகுதியில் ஒரு ஏக்கர் 12 சென்ட் நிலம் உள்ளது.

தொடர்ந்து பல வருடங்களாக நிலத்தில் விவசாயம் செய்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இதே பகுதியை சேர்ந்த திமுக கட்சியில் உள்ள திருமூர்த்தி என்பவர், தாங்கள் பயன்படுத்தி வந்த சாலையை மறித்து விவசாய நிலத்திற்கு செல்ல விடாமல் தடுப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது வரை விவசாய நிலத்திற்கு செல்ல முடியவில்லை எனக் கூறி மாற்றுத்திறனாளி துரைப்பாண்டி வீல் சேருடன் தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புக்கு இருந்த காவலர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றி மாவட்ட ஆட்சியுடன் புகார் மனுவை வழங்குவதற்கு அழைத்துச் சென்றனர்

மாற்றுத்திறனாளி வீல் சேருடான் மண்ணெண்ணெய் ஊற்றிய சம்பவம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ