திமுக கொடுத்த குடைச்சல்.. திருப்பூரில் இருந்து வங்கதேசம் சென்ற தொழில் நிறுவனங்கள் : எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2024, 4:43 pm

கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் செயல் வீரர்கள் கூட்டம்,மற்றும் அதிமுக உறுப்பினர்கள் அட்டைகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி,இன்று அனைத்து நெசவாளர்களுக்கும் நெசவாளர் தின வாழ்த்துக்கள்.

அதிமுக தான் நெசவாளர்களுக்கு அதிக திட்டம் கொடுத்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

2026 ல் அதிமுக தான் வெற்றி பெறும். கோவைக்கு அத்தனை திட்டம் கொடுத்தது அதிமுக தான், பாலம், கூட்டு குடிநீர் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், 6 புதிய கல்லூரி என அனைத்தையும் கொடுத்துள்ளோம்.

வயநாடு பாதிப்புக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருத்தம் தெரிவித்தார். தொடர்ந்து நிவாரண நிதியாக நேற்று 1 கோடி வழங்கினோம்.
இன்று கோவையில் இருந்து 20 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மூன்று லாரிகள் மூலம் அனுப்பியுள்ளோம்.

இதுவரை 1 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வயநாடுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்த மாதிரி பாதிப்புக்கெல்லாம் அதிமுக கண்ணீர் துடைக்கும்.

கோவையில் சாலைகள் மிக மோசமாக உள்ளது. 500 சாலைகள் திட்டத்தை திமுக ரத்து செய்தனர்.வீடு கட்டுவதற்கு அனுமதி பெற இரு மடங்காக உயரத்தியுள்ளனர்.

அதையெல்லம் திமுக ரத்து செய்ய வேண்டும். மின்சார உயர்வு ஜிஎஸ்டி போன்ற பிரச்சனைகளால் தொழில் நிறுவனங்கள் திருப்பூரிலிருந்து வங்கதேசத்திற்கு சென்றுள்ளது.

வங்க தேசத்தில் தற்போது கடுமையான பிரச்சனைகள் நிலவி வருகிறது.திருப்பூருக்கு வட்டி இல்லாத கடன் வழங்க மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுத்து இனி தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலத்திற்கு போகாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டு அரசும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.அத்திகடவு தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.முழுமையாக ஆய்வு செய்து குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 264

    0

    0