பிரதமர் மோடிக்கு கைக்கொடுத்தது திமுக… அமைச்சர் துரைமுருகன் சொன்ன FLASHBACK!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2023, 11:58 am

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பொதுசெயலாளர் தமிழக நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில் மோடியை எனக்கு குஜராத் முதல்வராக இருக்கும் போதிலிருந்தே பழக்கம்.

காரணம் பெரும்பாலான முதலமைச்சர் கூட்டங்களுக்கு கருணாநிதி செல்லமாட்டார் என்னை அனுப்புவார். அதற்கு பிறகு நானும் ஆட்சிக்கு வந்த பிறகு நானும் தலைவரும் மோடியை சந்திக்க முதல் முறை டெல்லிக்கு சென்றோம். பாசத்துடன் மோடி தலைவரை வரவேற்றார். தளபதிக்கு வரவேற்பு கொடுத்தார். கடைசியாக நான் மோடியை பார்த்து உங்களோடு நான் ஒரு வார்த்தை பேசலாமா என்றேன்.

அப்போது நான் உங்களுக்கு கைகொடுக்கிறோம் நாட்டின் முன்னேற்றத்திற்காக என்று சொன்னேன் அவர்கள் என்னை பாராட்டினார்கள். அப்படிபட்ட பிரதமர் மோடி ஏர்போர்ட் வந்தார்.

அப்போதும் அவரை நான் வரவேற்றேன். அந்த பெருமையை எனக்கு அளித்தது காட்பாடி தொகுதி காட்பாடியில் பல முறை போட்டியிட்டவன் நான் பலபேரை என்னை தோற்கடித்த படை எடுத்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை என பேசினார்.

  • sivakarthikeyan movie cameraman ravi k chandran had chest pain திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி; சிவகார்த்திகேயன் பட ஷூட்டிங்கில் நடந்த திடீர் சம்பவம்!