கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை கொடுத்த திமுக : IUML கட்சிக்கு ஒரு தொகுதி.. ராமநாதபுரத்தில் போட்டி என அறிவிப்பு!
Author: Udayachandran RadhaKrishnan24 February 2024, 7:44 pm
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை கொடுத்த திமுக : IUML கட்சிக்கு ஒரு தொகுதி.. ராமநாதபுரத்தில் போட்டி என அறிவிப்பு!
மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வேகமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியது.
அந்த வகையில் கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதி கொடுக்க வேண்டும் என்றும் எந்தெந்த தொகுதி என்றும் அக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று இந்திய முஸ்லீம் லீக் கட்சி திமுக பேச்சுவார்த்தை நடந்தது.
பேச்சுவார்த்தை பின்னர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதாவது ராமநாதபுரம் லோக்சபா தொகுதியை இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிக்கு திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் காதர் மொய்தீன் கையெழுத்து இட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காதர் மொய்தீன் கூறியதாவது:- “ஒரு மாநிலங்களவை சீட் கேட்டு இருக்கிறோம். திமுக கூட்டணியில் எங்களுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ்கனி எம்பி போட்டியிடுகிறார்” என்று கூறினார்.