செய்யாறு சிப்காட் விவகாரம்.. பொய் வழக்கு போட்ட திமுக அரசு : விவசாயிகள் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 November 2023, 3:50 pm

செய்யாறு சிப்காட் விவகாரம்.. பொய் வழக்கு போட்ட திமுக அரசு : விவசாயிகள் தர்ணா போராட்டத்தால் பரபரப்பு!!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சிப்காட் தொழிற்பேட்டை 3-வது யூனிட் விரிவாக்கத்துக்காக 11 கிராமங்களில் 3,174 ஏக்கர் விவசாய நிலங்களை தமிழ்நாடு அரசு கைப்பற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிரே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்து ஏழு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தமிழக முதலமைச்சர் அவருடைய அறிவுறுத்தலின் பேரில் ஆறு பேர் மீது குண்டச்சட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையில் அனைத்து தரப்பு விவசாயிகள் மீது இதுபோன்ற வழக்கு பதிவுகளை கண்டித்து இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் கலிவரதன் செயலாளர் முருகையன் பொருளாளர் நாகராஜன் உள்ளிட்டோர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 520

    0

    0