திமுக அரசின் திட்டங்கள் போட்டோஷூட்டுடன் நின்றுவிடுகிறது : மக்கள் நீதி மய்யம் குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
26 August 2022, 4:30 pm
Quick Share

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளார். கோவையில் செப்டம்பர் 17 ம்தேதி பயணத்தை துவக்க உள்ள நிலையில்,இது தொடர்பான ஆலோசணை கூட்டம் கோவை டவுன்ஹால் பகுதியில் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் மாநில செயலாளர் செந்தில் ஆறுமுகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு நேரடியா அந்த மாவட்டங்களுக்கே சென்று பிரச்சனைகளை முன்னெடுத்து பேசி வருவதாக தெரிவித்தார்.

மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வண்ணம் கமலஹாசன் தமிழகம் தழுவிய பயணத்தை துவங்க உள்ளதாகவும் செப்டம்பர் மாதம் கோவைக்கு வருகை தந்து அந்த பயணத்தை துவங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தொகுதி வளர்ச்சி என்ற திட்டத்தை கமலஹாசன் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இன்று மாலை காந்திபார்க் பகுதியில் தெருமுனை பிரச்சார கூட்டத்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டம் இன்னும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை என தெரிவித்த அவர் இதனால் மக்கள் அரசு சேவைகள் கிடைக்கபெற தாமதமாகிறது என்றும் தாமதப்படுத்திய அரசு அலுவலர்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்கப்படுவதில்லை என கூறினார்.

எனவே இந்த சட்டத்தை அமல்படுத்தினால் அந்த அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அந்த அபராதம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அனைத்து அரசு சேவைகளும் குறித்த நேரத்தில் மக்களுக்கு கிடைக்கபெற வேண்டும் என தெரிவித்த அவர் அதன் அடையாளமாக கடிகாரத்திற்குள் கமலஹாசன் முகம் பொறித்த லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் எஸ்பி வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க் வேண்டும் என திமுக கூறி வந்த நிலையில் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தெரிவித்தார். மேலும் அனைத்து ஆதாரங்கள் இருந்தும் எஸ் பி வேலுமணி கைது செய்யப்படவில்லை எனவும் இதற்கு காரணம் என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் இலவசங்கள் வேறு அரசு நலத்திட்டங்கள் வேறு என தெரிவித்த அவர் தேர்தலுக்காக வீட்டு உபயோக பொருட்களை இலவசமாக தருகிறோம் எனக் கூறுவது தான் மக்களை கவரும் யுத்திகள் எனவும் இதனை தாங்கள் என்றும் ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.

மத்திய அரசு மாநில அரசு யார் தவறு செய்தாலும் அது குறித்து கேள்வி எழுப்புவோம் என தெரிவித்தார். மேலும் திமுக அரசு அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என தெரிவித்த அவர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மனு அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அதனை நிறைவேற்றவில்லை என்றால் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் பல திட்டங்கள் வெறும் போட்டோ ஷூட் மற்றும் விளம்பரங்களுடன் நின்று விடுவதாகவும், செயல் முறை படுத்தல் இல்லை என குற்றம் சாட்டிய அவர் உதாரணத்திற்கு நரிகுறவர் பெண்னாண அஸ்வினி க்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட உதவிகள் எதுவும் இன்றுவரை கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

  • பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்…. இதுக்கெல்லாம் கோபிக்கலாமா!
  • Views: - 563

    0

    0