முட்டையை காட்டினாலும் செங்கலை காட்டினாலும் இனி திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்ல : அதிமுக எம்எல்ஏ தாக்கு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2023, 7:57 pm

முட்டையை காட்டினாலும் செங்கலை காட்டினாலும் இனி திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்ல : அதிமுக எம்எல்ஏ தாக்கு!!

மதுரை கடச்சனேந்தல் பகுதியில் அதிமுக பூத் கமிட்டிக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது

கூட்டத்தில் பேசிய ராஜன் செல்லப்பா… கடந்த முறை உங்களை பார்க்கும் போது உங்கள் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.. இப்போது உங்கள் முகம் மகிழ்ச்சியாக இருக்கிறது..

அதற்கு காரணம் பாஜாகவுடன் கூட்டனி இல்லை என்ற அறிவிப்பு..
பாஜகவுடன் கூட்டனி கடந்த முறை பல இடங்களில் ஓட்டு கேட்டக போக முடியவில்லை. கட்சியில் இருக்கும் இஸ்லாமிய தொண்டர்கள் ஓட்டு கேட்க்க வர மாட்டேன் என்று கூறினார்கள்.

இந்தியா பிரதமர் யார் என்று நிர்ணயிக்கும் தகுதி ஜெயலலிதா போல் எடப்பாடி பழனிசாமிக்கு தான் உள்ளது… என்று பேசினார்..

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, மோடி முதல்வராக இருக்கும்போது பிரதமராக வருவோம் என்று எதிர்பார்த்து இருப்பாரா??
அதேபோல் எடப்பாடி பழனிச்சாமிக்கும் தகுதி இருக்கிறது..

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் பிரதமராக தகுதி இருக்கிறது
எங்களைப் பொறுத்த வரைக்கும் அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மீண்டும் வரவேண்டும்.

முட்டையை காட்டினாலும் செங்கலை காட்டினாலும் திமுக ஆட்சி ஒருமுறைதான் ஆட்சியில் இருக்கும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடிக்காது

பாஜகவை விட்டு வெளிவர வேண்டும் என்று முடிவு முன்பே எடுத்து விட்டோம். சரியான நேரத்தில் முடிவை எடுப்பது தான் ராஜதந்திரம்.. என்று கூறினார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 332

    0

    0