பாமக பிரமுகரின் கார் மீது நாட்டு வெடியை வீசிய திமுகவினர்.. சாலை மறியலால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 2:42 pm

பாமக பிரமுகரின் கார் மீது நாட்டு வெடியை வீசிய திமுகவினர்.. சாலை மறியலால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்ட பாமக மாவட்ட செயலாளராக வழக்கறிஞர் பால சக்தி பதவி வகித்து வருகிறார்.

இவர் வருகின்ற 13 ஆம் தேதி விழுப்புரம் தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கரை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் அனுமதி பெறுவதற்காக பாமக மாவட்ட செயலாளர் பால சக்தி தனது கார் மூலம் வந்த பொழுது பெரும்பாக்கம் என்ற பகுதியில் இவர் கார் சென்ற பொழுது அவ்வழியாக திமுகவைச் சேர்ந்த விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர். லட்சுமணன் மற்றும் திமுக வழக்கறிஞர் கல்பட்டு ராஜா ஆகியோர் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது திமுகவினர் பட்டாசு வெடித்து உள்ளனர்.

அப்போது நாட்டு வெடியை தூக்கி பாமக மாவட்ட செயலாளர் பாலசக்தி கார் மீது வீசி உள்ளனர். இதனால் கார் சேதமடைந்தது.

திட்டமிட்டு அவர் கார் மீது வீசியதாக கூறி விழுப்புரம் எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் மற்றும் திமுக வழக்கறிஞர் கல்பட்டு ராஜா ஆகிய இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பாமகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி சுரேஷ் ஏடிஎஸ்பி தினகரன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று காவல் துறையினர் உறுதியளித்ததன் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் விழுப்புரம் திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  • Mohanlal Appreciates Lubber Pandhu Team லப்பர் பந்து வேற லெவல் படம்.. திறமையா எடுத்திருக்காங்க : உச்ச நடிகர் பாராட்டு!
  • Views: - 518

    0

    0