’எடுப்பார் கைப்பிள்ளையா நான்?’ அமைச்சர் பேச்சை கேட்காத திமுக பிரமுகர்.. திமுக தலைமைக்கு எச்சரிக்கை ஒலி?

Author: Hariharasudhan
16 January 2025, 6:01 pm

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட முயற்சி செய்து வாய்ப்பு அளிக்கப்படாத விரக்தியில் திமுக பிரமுகர் போட்ட பதிவு கட்சியினுள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு: ‘நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கமாட்டேன், எனக்கு வாய்ப்பு வழங்கி எம்எல்ஏ ஆகிவிட்டால், கட்சியையும் கைப்பற்றி விடுவேன் என்று பயந்த சிலர், எனக்கு வரும் வாய்ப்பை தட்டி விட்டனர். துரோகங்களால் நான் வீழ்த்தப்பட்டுள்ளேன்’ என தனது மனக்குமுறலைக் கொட்டியுள்ளார், ஈரோடு கிழக்கில் போட்டியிட விரும்பி, கடைசி வரை சென்ற மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார்.

இந்தப் பதிவு திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்த, இந்தப் பதிவை அகற்றுமாறு அமைச்சர் முத்துசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளார். ஆனால், செந்தில்குமார் அகற்றவில்லை. எனவே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சந்திரகுமார், செந்தில்குமாரைச் சந்தித்து பேசியுள்ளார்.

இதனையடுத்து, ‘உறவுக்கு கைகொடுப்பேன். உரிமைக்கு கம்பீரக் குரல் கொடுப்பேன். கடமையை செய்வேன்’ என்று மறுபதிவினைப் போட்டு, தேர்தல் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். மேலும், இது தொடர்பாக பிரபல நாளிதழுக்கு செந்தில்குமார் அளித்த பேட்டியில், ‘நான் எதையும் மறுக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. கட்சித் தலைமைக்கு, விசுவாசமாக இப்போது களப்பணியாற்றத் தொடங்கி விட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Erode East By Election 2025 DMK clash

எப்போதும் திமுகவில் அண்ணாதுரை, கருணாநிதி, ஸ்டாலின் தலைமுறை நிர்வாகிகளைத் தொடர்ந்து, தற்போது உதயநிதி ஆதரவு நிர்வாகிகள் தலையெடுக்கத் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. எனவே, கட்சிப் பதவிகள் தொடங்கி, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரையிலான பதவிகளை பிடிப்பதில் கடும் போட்டியும் ஏற்படுவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கலெக்டர் ஆபீஸ் அருகே சினிமாவை மிஞ்சிய துணிகரம்.. பட்டப்பகலில் வங்கிப்பணம் கொள்ளை!

அதேநேரம், இந்த போட்டிகளில், கட்சிக்காக உழைத்த, தொடர்ந்து திமுகவில் இருந்து உழைத்து வரும் ‘ஒரிஜினல்’ திமுகவினர் புறக்கணிக்கப்படுவதாகவும், இதற்கு ஒரு சான்றுதான், ஈரோடு கிழக்கில் செந்தில்குமார் எழுப்பிய குரலாக அமைந்துள்ளதாகவும், திமுக தலைமைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

முன்னதாக, ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து, இத்தொகுதி திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும், அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!