திமுக என்றாலே இரட்டை வேடம்தான்… திருமாவளவன் மட்டும் இதை செய்தால் போதும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2022, 11:48 am

பெரம்பலுாரில், நேற்று, பா.ஜ., கட்சியின் தரவு மேலாண்மை பிரிவு (ஐ.டி.,விங்) சார்பில், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பா.ஜ., கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, தி.மு.க., தலைவர் உட்பட கட்சியின் அனைத்து முக்கிய தலைவர்களும், ஹிந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்.

சமீபத்தில், சிதம்பரம் நடராஜர் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறாக பேசியவர்கள் மீது புகார் கொடுத்தும், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது போல், அவதுாறாக பேசுபவர்களுக்கு மறைமுகமாக, பின்னணியில் ஆதரவு கொடுக்கும் அரசாக உள்ளது. இந்த அரசு ஒரு சாராருக்கு ஆதரவாக இருப்பதை, மக்களிடம் பா.ஜ.க, கட்சி எடுத்துச் சொல்லும்.

உண்மையிலேயே தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றால், முன்னணியில் இருந்து ஆர்ப்பாட்டமும், அரசியலும் இல்லாமல் பணி செய்யும் இயக்கத்தை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும். பா.ஜ.க, கட்சியில், பட்டியல் இனத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

போதைப் பொருளை ஒழிக்க வேண்டும், என முதல்வர் பேசிக்கொண்டு, வீதிக்கு வீதி டாஸ்மாக் கடையை திறந்து வைத்து, இரட்டை வேடம் போடுகிறார்.

தி.மு.க., ஆட்சியில் பல ஊராட்சித் தலைவர்கள் கொடியேற்ற கூட முடியாமல் உள்ளனர். தி.மு.க., என்றாலே இரட்டை வேடம் தான். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

  • china decided to ban american movies shocking marvel fans சூப்பர் ஹீரோ திரைப்பட நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கப்போகும் சீனா?