விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம் : சினிமாத்துறையே முடங்கியதற்கு காரணம் ரெட் ஜெயண்ட்.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 October 2023, 7:33 pm

விஜய்யை பார்த்து திமுகவுக்கு பயம் : சினிமாத்துறையே முடங்கியதற் காரணம் ரெட் ஜெயண்ட்.. முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் கொடி காத்த குமரனின் 120வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமை அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய கடம்பூர் ராஜூ, விஜய்யை பார்த்து திராவிட முன்னேற்ற கழகம் பயப்படுகிறது. சினிமாவில் எந்த நடிகர்களாக இருந்தாலும் அரசு ஏற்றத்தாழ்வுகளை பார்க்க கூடாது.

கடந்த அதிமுக ஆட்சியில் பண்டிகை காலங்களில், முன்னணி நடிகர்களின் படம் வரும்போது எந்த பாரபட்சமும் பார்க்காமல் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுத்திருந்தோம். ஆனால் தற்போது குறிப்பிட்ட படங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது சரியல்ல.

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் திரைப்படங்கள் பாரபட்சமில்லாமல் திரையிடப்பட்டது. ஆனால் தற்போது 200க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்படாத சூழ்நிலையில் தான் உள்ளது.

திரைத்துறையே முடங்கி இருப்பதாக எங்களைச் சந்திக்கும் சினிமா துறையினர் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ரெட் ஜெயன்ட் என்ற நிறுவனத்தின் தனி ஆதிக்கம் தான் எனத் தெரிவித்துள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ