திமுக நடைபிணம் ஆகப் போகுது… 2024ல் பாஜகவுக்கு திருப்புமுனை பொள்ளாச்சியில் இருந்து வரும் : அண்ணாமலை சூசகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 December 2022, 3:12 pm

திமுகவின் ஊழலை புகார் செய்ய வெப்சைட் தயாரிக்க உள்ளோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் பாஜக மற்றும் அரிமா சங்கம் சார்பில் வாஜ்பாய் 98 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு 100 நபர்களுக்கு காது கேட்கும் கருவி மற்றும் செயற்கை கால்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அண்ணாமலை, நலத்திட்ட உதவியாக இருந்தாலும் அரசியல் பேசாமல் இருக்க முடியாது. திமுக வந்த பிறகு பாஜகவிற்கு எழுச்சி ஏற்பட்டு உள்ளது. இது எப்போதும் இல்லாத எழுச்சி.

ரபேல் வாட்சை வைத்து 25 எம்.பிகள் வாங்கிவிடலாம். ரபேல் வாட்ச் மூலம் பேசும் பொருளாக ஊழல் ஏற்பட்டுள்ளது. எப்போது டீ கடையில் பேசுகிறார்களோ அப்போதுதான் பில் ரிலீஸ் பண்ணுவேன். அன்று அரசியல் புரட்சி நடைபெற்றுள்ளது என்று அர்த்தம்.

ஊழலைப் பற்றி பேச தராதரம் வேண்டும். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் திமுக நமக்கு வாய்ப்பு கொடுத்திருக்காது. 25 எம்பிகளை வாங்க ரபேல் வாட்சும் உழைக்கும்.

பொதுமக்கள் திமுகவின் ஊழலை புகார் செய்ய வெப்சைட் தயாரிக்க உள்ளோம். தமிழ்நாடு முழுவதும் திமுக அமைச்சர்களின் பினாமி யார் என்று கண்டுபிடிக்க இந்த அப்ளிகேஷன் மூலம் பொதுமக்கள் ஒரு புகைப்படம் எடுத்து பதிவு செய்யலாம்.

முதலமைச்சரின் குடும்பத்தை பற்றி பேச யாருக்கும் தைரியம் இல்லை. நமக்கு தைரியம் உள்ளது. டீக்கடையில் பேசும் பொழுது தான் அரசியல் ஆரம்பிக்கிறது.

இரண்டு லட்சம் கோடியா வாட்சின் பில்லா.? டீக்கடையில் பேசுவார்கள். பாஜகவின் சார்பில் பூத்து கமிட்டி அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

வசிக்கும் இடத்தில் பூத் கமிட்டி இல்லை என்றால் நீங்கள் அவமானமாக நினைக்க வேண்டும். டூ ஆர் டை காலத்தில் நாம் உள்ளோம். 2024 இல் திமுக கட்சிக்கு முடிவுரை எழுத முடியும். 25 எம்பிக்கள் வாங்கி விட்டால் திமுக ஆட்சியில் இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன. நடைபிணம் ஆகிவிடும்.

எல்லா சூழ்நிலையும் உருவாக்கி விடலாம். தொண்டர்கள் தான் பாஜக வெற்றியை தீர்மானிப்பவர்கள். நீங்கள் வெற்றி பெற வைக்க வேண்டும்.

ஆண்டவன் எங்கள் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வைக்கிறார். உண்மையான மனிதத்தை பார்க்க நலத்திட்ட உதவிகள் தான் தேவை. தொண்டர்கள் கடுமையாக பாடுபடுங்கள். 2024 திருப்புமுனை பொள்ளாச்சியில் இருந்து வரும் என பேசினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ