பணிகளை செய்ய விடாமல் தடுக்கும் திமுகவினர்… 100க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் திடீர் தர்ணா!!!
Author: Udayachandran RadhaKrishnan24 April 2023, 4:29 pm
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தை கோலியனூர், விக்கிரவாண்டி, மயிலம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நடைபெறும் பணிகளை செய்ய ஊராட்சி மன்ற தலைவருக்கே அதிகாரம் இருப்பதாகவும், ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்த பொருப்பாளர்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு தெரியாமலேயே சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே ஊராட்சி மன்ற தலைவர் செய்து வரும் பணியை தடுத்து ஆளும் கட்சியினர் பணியை செய்வதாக குற்றம் சாட்டினர்.
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மனுவாக அளிக்க கூறியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
ஊராட்சி மன்ற தலைவர்களின் போராட்டம் காரணமாக மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.