கடைசி வரை பெரியார் சுத்தமாக மதிக்காத கட்சி என்றால் அது திமுக தான் : அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2023, 7:20 pm

கடைசி வரை பெரியார் சுத்தமாக மதிக்காத கட்சி என்றால் அது திமுக தான் : அண்ணாமலை பரபரப்பு பேச்சு!!

மேட்டுப்பாளையத்தில் நடந்த நடைபயண பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசும்பேது, தமிழகத்தில் தாய்மார்களும், சகோதரிகளும் பிரதமர் மோடியின் பக்கம் நிற்கின்றனர். பலரும் பெண் சுதந்திரம் பற்றி பேசுவார்கள். ஆனால் நாம் அதனை செய்து காட்டியுள்ளோம்.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் 400 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்று, மீண்டும் மோடி ஆட்சியையும், அவரை பிரதமராகவும் பாராளுமன்றத்தில் அமர வைக்க வேண்டும்.

ஏழைகளின் நலன், இந்தியா உலக நாடுகளிடையே உண்மையான பொருளாதார இடத்தை பெற, மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைய வேண்டும்.

இங்கே கூடியுள்ள கூட்டம் சாதாரண கூட்டம் இல்லை. தொண்டர்கள் ரூ.1000 உழைத்தால் ரூ.500 கட்சிக்காக செலவு செய்கின்றனர். யாரிடமும் கமிஷனுக்காக கைக்கட்டி நிற்கவில்லை. ஊழல் இல்லாத ஆட்சியை பா.ஜனதாவால் மட்டும் தான் தர முடியும்.

நீலகிரி தொகுதியில் ஊழல்வாதி ராசா எம்.பி.யை அப்புறப்படுத்த வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரூ. 12 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. ஆ. ராசா ரூ. 1.70 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளார்.

கோவைக்கு பிரதமர் திட்டத்தில் 53 ஆயிரத்து 688 பேருக்கு இலவச வீடு வந்துள்ளது. குடிநீர் 66 சதவீதம் பேருக்கு குழாய் மூலம் வருகிறது. இப்படி பல திட்டங்களை நாங்கள் கொடுத்துள்ளோம். நாங்கள் அதனை சொல்லி வாக்கு கேட்போம், தி.மு.க. எதனை கூறி வாக்கு கேட்கும். அவர்கள் தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து சென்று சிலர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தனர். அப்படி அவர்கள் சென்றபோது, கண்ணீர் துளிகளோடு, திராவிட கழகத்தில் இருந்து பிரிந்து செல்வதாக தெரிவித்தனர்.

இதனால் பெரியார், அவர்களை தி.மு.க. தலைவர்கள் என்று அழைக்கவில்லை. கடைசி வரை கண்ணீர் துளி தலைவர்கள் என்றே அழைத்தார். பெரியார் சுத்தமாக மதிக்காத ஒரு கட்சி என்றால் அது திராவிட முன்னேற்ற கழகம் தான்.

1965-ல் இந்தி திணிப்பு போராட்டத்தின்போது, பெரியார் இந்தி திணிப்பு போராட்டம் என்பதே தி.மு.க.வின் ஒரு நாடகம். தி.மு.க. கட்சியே ஒரு நாடக கட்சி. கண்ணீர் துளி கட்சி, பொய்யை சொல்லி ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி. இந்த கட்சியை நீங்கள் முழுவதுமாக அப்புறப்படுத்த வேண்டும். தி.மு.க.வுக்கு தலைவர்கள் கிடையாது. அவர்களுக்கு கொள்கை கிடையாது. மொத்தத்தில் தி.மு.க. என்பது தலைவர்கள், கொள்கை இல்லாத கட்சியாகும் என அவர் பேசினார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 330

    0

    0