5 ஆண்டுகளில் கிடுகிடுவென உயர்ந்த கனிமொழியின் சொத்து மதிப்பு… பிரமாணப்பத்திரத்தில் வெளியான தகவல்…!!

Author: Babu Lakshmanan
26 March 2024, 8:26 pm

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த கனிமொழியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை திமுக எம்பி கனிமொழி தாக்கல் செய்தார். அதில், அவருடைய சொத்து தொடர்பான விபரங்கள் இடம்பெற்றுள்ளது.

கடந்த முறை தேர்தலில் போட்டியிடுகையில், தனக்கு அசையும் சொத்தாக 21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 369 ரூபாய் அளவு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அசையா சொத்தாக ரூபாய் 8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அளவு அசையா சொத்து இருப்பதாக தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக வேட்பாளர் கனிமொழியின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்திருப்பது அவரது பிரமாணப் பத்திரத்தில் தெரிய வந்துள்ளது. அசையும் சொத்து மதிப்பு சுமார் 17 கோடி அளவுக்கும், அசையா சொத்து மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் அளவுக்கும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அசையும் சொத்தாக 38 கோடியே 77 லட்சத்து 79 ஆயிரத்து 177 ரூபாய் இருப்பதாகவும், அசையா சொத்தாக 18 கோடியே 54 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்