திமுக பிரமுகருக்கு விஷம் தடவிய அரிவாளால் வெட்டு : திண்டுக்கல் அருகே பயங்கரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2023, 4:53 pm

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் வெள்ளோடு பிரிவு எதிரே ஜே.டி. போர்வெல் வைத்திருப்பவர் திமுகவைச் சேர்ந்த சமாதான பிரபு.

இவருக்கும் சாம்சன் என்பவருக்கும் தொழில் போட்டி கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி சமாதான பிரபு வெள்ளோடு பிரிவு அருகே இரவு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த சாம்சன் தான் மறைத்து வைத்திருந்த விஷம் தடவிய அரிவாளால் வெட்டியுள்ளார்.

கையில் பலத்த காயமடைந்த சமாதான பிரபு கூச்சலிட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு சமாதான பிரபுவை வெட்டுக்காயத்தை பரிசோதிக்காமல் சிறிய காயம் தான் என்று கூறி மருத்துவர்கள் கட்டுப்போட்டு உள்ள நிலையில் இரண்டு நாட்களில் கை முழுவதுமாக வீங்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடன் இருந்த சமாதான பிரபுவின் உறவினர்கள் அரசு மருத்துவர்களை பரிசோதிக்க சொன்னபோது சிறிய காயம் தான் சரியாகிவிடும் என அலட்சியம் காட்டியுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தொடர்ந்து இந்த அலட்சியப் போக்கு நடைபெற்று வருவதாக உள்ள நிலையில் உடனடியாக சமாதான பிரபுவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் மாற்றி தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சமாதான பிரபுவிற்கு விஷம் தடவிய அறிவாளால் வெட்டப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் சமாதான பிரபு தொழில் போட்டி காரணமாக கொலை முயற்சி செய்யப்பட்டுள்ளார் எனக் கூறி அவரின் உறவினர்கள் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த 30ஆம் தேதி புகார் மனு அளித்துள்ளனர்.

புகாரில் மேலும் தங்களது குடும்பத்திற்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஐந்து நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்த்து வருவதாகவும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக குற்றவாளியை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி வேதனை தெரிவித்தார்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 557

    0

    0