கருணாநிதி பிறந்த நாளையொட்டி 30 அடி போஸ்டர்… தெறிக்கவிடும் சாதிய அடக்குமுறை வசனம்… வைரலாகும் போஸ்டர்…!!

Author: Babu Lakshmanan
3 June 2022, 11:47 am

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனங்களை 30 அடி போஸ்டராக ஒட்டி திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளில், கலைஞர் சாதிய அடக்குமுறை பற்றி பேசிய வசனமான “கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்,” என்ற வரிகளை போஸ்டராக ஒட்டியுள்ளனர்.

ரயில் நிலையம், உக்கடம், போன்ற பகுதிகளில் இந்த போஸ்டரை சுமார் 30 அடி நீளத்திற்கு ஒட்டியுள்ளனர். பெரிய கடை வீதி பகுதி கோவை மாநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் CMS மசூது, வர்த்தக அணி துணை அமைப்பாளர் அபுதாஹிர் ஆகியோர் இந்த போஸ்டரை ஒட்டியுள்ளனர். இந்த 30 அடி நீள போஸ்டரை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?