திமுக பிரமுகரால் என் உயிருக்கு ஆபத்து.. கதறும் இளைஞர் : CMக்கு Video மூலம் வேண்டுகோள்!
தெற்கு கள்ளிகுளத்தைச் சேர்ந்தவர் ஜோசப் பெல்சி இவர் ராதாபுரம் திமுக ஒன்றிய மேற்கு பகுதி செயலாளராக உள்ளார். இவரது சகோதரர் மருத்துவர் ஆனந்த். இவர் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த பனிமயமாதா ஆலயத்தின் தர்மகர்த்தாவாக உள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கோவில் தர்மார்த்தமாக உள்ள நிலையில் வரும் மே மாதம் தர்மகர்த்தா பதவி முடிவடையும் நிலையில் ஆலயத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தி புதிய தர்மகர்த்தா நியமிக்க வேண்டும் என ஜேசுராஜ் தரப்பினர் பிரச்சனை எழுப்பிய நிலையில் இது தொடர்பாக ஜேசுராஜ்க்கும் திமுக ஒன்றிய செயலாளரின் சகோதரர்களுக்கும் இடையே பூசல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் எதிரணியை சேர்ந்த ஜேசுராஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் அவரது குடும்பத்தார் வள்ளியூர் காவல் துறையில் தன் மீது ஏராளமான பொய் புகார்களை கொடுப்பதாகவும் அவற்றை நிறுத்த கோரியும் ஜோசப் பெல்சி அவரது சகோதரர் டாக்டர் ஆனந்த் மற்றும் பெஸ்கி ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து எனக்கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை விடுத்துள்ளார். திமுக ஒன்றியச் செயலாளரின் குடும்பம் தன்னை மிரட்டுவதாக கூறி வாலிபர் வீடியோ வெளியிட்டுள்ளது சமூக வலைதளத்தில் வைரலாகி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.