ரூ.3 லட்சம் கடன் வாங்கி மூதாட்டியை ஏமாற்றிய திமுக பிரமுகர் : தள்ளாடியபடி பணத்தை மீட்டு தரக் கோரி கண்ணீருடன் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2022, 2:13 pm

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் திமுக பிரமுகர் மீது மூதாட்டி மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள வக்கம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி பாப்பம்மாள். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. நெசவாளர் அணி பிரிவில் பதவியில் இருக்கும் ஆறுமுகம் தனது தாய் பத்மாவதி, தந்தை மணி ஆகியோர் பாப்பாம்மாளிடம் சென்று மூன்று லட்சம் வீட்டின் பத்திரம் வைத்து பணம் வாங்கி உள்ளனார் என்று குறிப்பிடுகின்றது.

பலமுறை பாப்பாம்மள் ஆறுமுகத்திடம் பணம் கேட்டு தரவில்லை, பாப்பாம்மள் மகள் தற்போது புற்றுநோய்யால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் பாப்பம்மாள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தனது பணத்தை மீட்டு தருமாறு அழுதபடி வந்தார். ஊழியர்கள் ஆறுதல் கூறி மனு எழுதி சார் ஆட்சியர் பிரியங்காவிடம் பாப்பம்மாள் மனு அளித்தார்.

மூதாட்டியிடம் மூன்று லட்சம் ரூபாயை தி.மு.க.பிரமுகர் பறித்த சம்பவம் குறித்து மூதாட்டி பாப்பம்மா அளித்த மனுவில் மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!