ரகசிய காதலியை தாக்கிய திமுக பிரமுகரின் மகன் : முறை தவறிய காதலால் நடந்த விபரீதம்.. சைலண்ட் மோடில் போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 2:23 pm

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வாணிக்கரை பஞ்சாயத்தில் 100நாள் பணித்தள பொறுப்பாளராக உள்ளவர் கல்பனா.

இந்த நிலையில் திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் நாகப்பன் மகன் வினோத்குமாருக்கும் கல்பனாவுக்கும் திருமணத்தை மீறிய உறவு உள்ளது.

இதனிடையே இருவருக்கு நேற்று கள்ளக்காதல் விவகாரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கல்பனாவை திமுக பிரமுகர் மகன் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து கல்பனா வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததுள்ளார்.

அதே சமயம் வினோத் குமார் மீது கூம்பூர் காவல் நிலையம், வேடசந்தூர் துணை கண்காணிப்பாளர், வடமதுரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இது வரை நடவடிக்கை எடுக்க வில்லை என்றும், சம்பவம் நடந்து 6 மாதங்களாகியும் ஆளுங்கட்சி நபரின் மகன் என்பதால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர் மல்க புகாரளித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 517

    0

    0