நலத்திட்டம் என்ற பெயரில் சில்வர் டப்பா விநியோகம் ; திமுக கூட்டத்தில் ஏமாற்றத்துடன் புலம்பி சென்ற பொதுமக்கள்..!!

Author: Babu Lakshmanan
11 April 2023, 3:48 pm

திருச்சி : நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் சில்வர் டப்பாவை திமுகவினர் வழங்கியதால் பொதுமக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டத்தை திரட்டுவதற்காக பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் தருகிறோம் என நிர்வாகிகள் மூலம் அந்தந்த பகுதிக்கு டோக்கன் கொடுக்கப்பட்டது. டோக்கனைப் பெற்றுக் கொண்ட பெண்களோ, பெரிய அளவில் நலத்திட்ட உதவிகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

கூட்டத்தில் பேச்சாளர்கள் பெரிய திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது என வீரவசனத்துடன் பேசி முடித்தனர்.

பின்னர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என கூறியதும், மேடை அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த
சில்வர் டப்பாக்களை சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் வழங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு கூடி இருந்த பெண்கள் இதற்குத் தான் இந்த டோக்கனா எனக் கூறி, இதையாவதை கொடுக்கிறார்களே என சென்று புலம்பி கொண்டே சில்வர் டப்பாவை அந்த கூட்ட நெரிசலிலும் வாங்கி சென்றார்.

திமுக நிர்வாகிகள் பெண்களிடம் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறோம் என்ற பெயரில் சில்வர் டப்பாவை மட்டும் கொடுத்து ஏமாற்றப்பட்டதாகக் கூறி, அப்பகுதி மக்கள் முனுமுனுத்தபடியே சென்றனர்.

  • Aamir Khan Quit Smoking for Son மகனுக்காக அதை பண்ண ரெடி…பட விழாவில் அமீர் கான் பரபர பேச்சு..!
  • Views: - 379

    0

    0