நிர்வாகிகள் நியமனத்தில் அதிருப்தி… கும்மிடிப்பூண்டி திமுக கூட்டத்தில் ரகளை… இருகோஷ்டிகளாக பிரிந்து மோதல்!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 10:01 pm

கும்முடிபூண்டியில் திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மாவட்டச் செயலாளரிடம் புதிய நிர்வாகிகளை முறையாக நியமனம் செய்யவில்லை என எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கும்மிடிப்பூண்டியில் மாவட்ட கழக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அப்போது, ஒன்றிய கழக செயலாளர் ஆனந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் புதிதாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து கட்சி நிர்வாகிகள் தங்களிடம் உரிய கருத்துகளைக் கேட்காமலே தேர்ந்தெடுத்ததாகவும், அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என கூறினார்.

இதனால், கூட்டத்தில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் விளக்கம் அளித்து கூட்டத்தை அமைதிப்படுத்தி நடத்தினார்.

திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

  • lal salaam movie released in ott soon ஹார்ட் டிஸ்க் கிடைச்சிருச்சு? ஓடிடிக்கு தயாரானது லால் சலாம்!