பவர் வருமா? வராதா? செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடந்த திமுக கூட்டம்.. கடுப்பான முன்னாள் அமைச்சர்!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 7:27 pm

பவர் வருமா? வராதா? செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் நடந்த திமுக கூட்டம்.. கடுப்பான முன்னாள் அமைச்சர்!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் இருளப்பட்டி கலைஞர் அரங்கில் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் தலைமையில் திமுக செயற்குழு உறுப்பினர்கள், ஊராட்சி பொறுப்பாளர்கள்,மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும் திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன்,கலந்து கொண்டு திமுக நிர்வாகிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்பு, பூத் கமிட்டி முகவர் பணி, குறித்து ஆலோசனை வழங்கி கொண்டிருந்தார்.

அப்போது அரங்கில் இருந்த லைட் திடீரென ஆப் ஆனது, அதன் பின் நீண்ட நேரமாகியும் லைட் ஏரியாததால் கோபமான முன்னாள் அமைச்சர் பழனியப்பன், லைட் வருமா வராதா ? என நிர்வாகிகளை கண்டித்து விட்டு நிர்வாகி ஒருவரின் செல்போன் டார்ச் லைட் ஆன் செய்ய சொல்லி அந்த வெளிச்சத்தின் மத்தியில் கூட்டத்தில் பேசி கொண்டிருந்தார். அப்போது கூட்டம் முடியும் தருவாயில் லைட் வெளிச்சம் வர இப்போது வந்து என்ன பயன் என செயற்குழு உறுப்பினர்களும் கடுப்பாகினர்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!