திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து திமுகவினரே போராட்டம் : மறைந்த திமுக தலைவரின் சொந்த மாவட்டத்தில் அவலம்!

Author: Udayachandran RadhaKrishnan
22 February 2024, 10:00 pm

திமுக நகர்மன்ற தலைவரை கண்டித்து திமுகவினரே போராட்டம் : மறைந்த திமுக தலைவரின் சொந்த மாவட்டத்தில் அவலம்!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 27 வது வார்டு பகுதியில் சாலை வசதி,குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர கோரி அப்பகுதி மக்கள் நகரமன்ற தலைவர் சோழராஜனிடம் மனு கொடுத்தனர்.

தங்கள் கோரிக்கைகள் மீது நகரமன்ற தலைவர் நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவித்ததாக கூறி 27 வது வார்டு பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மன்னார்குடி திருவாரூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த திமுக நகர செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் சமாதானப்படுத்திய நிலையில் மறியல் கைவிடப்பட்டது. மன்னார்குடி நகராட்சியின் நகர மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த மண்ணை சோழராஜன் என்பவர் உள்ளார் இவரை கண்டித்து திமுகவினரே மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி