கோவில் திருவிழாவில் பங்கேற்ற திமுக அமைச்சர் மற்றும் எம்பி : தேவராட்டத்தை கண்டு பக்தர்களுடன் சேர்ந்து உற்சாக நடனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 June 2022, 1:45 pm

ஒட்டன்சத்திரம் அருகே கோவில் திருவிழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து உற்சாக நடனமாடினர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது பெயில் நாயக்கன்பட்டி காளியம்மன் கோவில். இந்தக் கோவில் திருவிழா வருடா வருடம் நடைபெறுவது வழக்கம்.

இந்த கோவிலை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி இந்த கோயில் திருவிழாவை சுமார் ஏழு தினங்களுக்கு சிறப்பாக நடத்துவது வழக்கம். கோவில் திருவிழாவில் மூன்றாவது தினமான நேற்று இரவு திடீரென வந்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

அப்போது பொதுமக்கள் ஒன்றிணைந்து தேவராட்டம் ஆடிக்கொண்டிருந்த போது இவர்களுடன் இணைந்து உற்சாகமாக கோவில் முன்பு தேவர் ஆட்டம் ஆடியதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!