கொலை முயற்சி வழக்கு… நீதிமன்றத்தில் ஆஜரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்… தூத்துக்குடியில் பரபரப்பு!!
Author: Babu Lakshmanan5 January 2023, 11:46 am
கொலை முயற்சி வழக்கில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 2011ம் ஆண்டு திமுகவினர் இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். அப்பொழுது, திமுக எம்எல்ஏவாக இருந்த அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஆறுமுகநேரி நகர, திமுக செயலாளர் சுரேஷ் என்பவருக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கடந்த 2011 மார்ச் மற்றும் மே மாதங்களில் திமுக நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மீது கொலை வெறி தாக்குதல் பெட்ரோல் குண்டு வீச்சி கார் எரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றது. இந்தக் கொலை முயற்சி வழக்கு சம்பந்தமாக கொலை முயற்சி உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அமைச்சர் அனிதாகிருஷ்ணன் உட்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று ஆஜரான நிலையில் இன்று இரண்டாம் நாளாக இன்றும் அவரிடம் விசாரணை நடைபெறுவதை முன்னிட்டு இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.
இவ் வழக்கு தொடர்பாக அப்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்த கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் தற்போது பாரதிய ஜனதா கட்சி மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவரும் இன்று இவ்வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகினர், இந்த வழக்கினை விசாரணை செய்த மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி வரும் 23.1.2023-அன்று இந்த வழக்கினை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.