கமிஷன் தனக்கு கிடைக்காததால் திமுக அமைச்சர் பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளார் : செல்லூர் ராஜு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2022, 7:01 pm

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கான கமிஷன் தொகை கிடைக்காததால் , பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையில் திமுக பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல்வேறு நபர்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு முன்னிலையில் அதிமுக கட்சியில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது , ஒன்றிய பிரதமர் என கூறி வந்த தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமர் என கூறி வரவேற்கின்றார்.

ஏன் இந்த முறை நரேந்திர மோடி அவர்களை ஒன்றிய பிரதமர் என அழைக்கவில்லை என கேள்வி ? வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனைக்கு பயந்து தமிழக முதல்வர் தற்போது இந்திய பிரதமரை வரவேற்பு அளிக்கின்றார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு விமர்சித்தார்..

ஆர் எஸ் எஸ் அமைப்பினர் அதிமுக கட்சியில் இணைவது குறித்த கேள்விக்கு ? அதிமுகவின் கொள்கை ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு பிடித்ததால் எங்களது கட்சியில் இணைவதாக கூறினார்.

மேலும் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தனக்கான கமிஷன் தொகை கிடைக்காததால் , பல திட்டங்களை முடக்கி வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், நீதித்துறை மற்றும் வணிகவரித்துறை ஆகிய இரண்டு அமைச்சர்களும் மதுரையின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் ஆறு முறை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினோம் அப்போது கேரள அரசு எங்களுக்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.

ஆனால் தற்போது அண்டை மாநிலம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கொடுக்கும் நெருக்கடியை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சமாளிக்க முடியவில்லை.

ரூல்கரவ் திட்டத்தின் மூலம் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக தனது தேர்தல் வாக்குறிதியை நிறைவேற்றாததால் அக்கட்சியினரே திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் தற்போது இணைந்துள்ளனர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…