சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
26 April 2023, 10:27 am

சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக அமைச்சர் : நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!!

2006-2011 தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி மற்றும் உதவியாளர் உட்பட 5 பேர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 2012-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி கிறிஸ்டோபர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 339

    0

    0