அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை என்று நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை மூன்று மாவடியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் 1,295 சதுர அடி பரப்பளவில் 3 கோடியே 20 இலட்சம் மதிப்பில் 100 பெண் பயிற்சியாளர்கள் தங்கக்கூடிய 25 அறைகளுடன் கட்டப்பட்ட அரசு பெண்கள் தொழில் பயிற்சி நிலைய விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையடுத்து, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் குத்து விளக்கு ஏற்றினர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில்,”மதுரையில் 48வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் 3 அல்லது 4வது வாரத்தில் நடைபெறும். பாராளுமன்ற கூட்டம், சுதந்திர தினம் வருவதால் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தள்ளி போகிறது. அதிமுக ஆட்சியில் ஊழலில் கொடூர ஊழல் நடந்துள்ளது. கால நிலை மாற்றத்தினால் மதுரை மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது.
இந்த மழையினை வைத்து நிறைய கற்றுக் கொண்டோம். மழையினால் பாதிப்புகள் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் 10 ஆண்டுகளில் எந்தவொரு பணிகளும் நடைபெறவில்லை. மதுரையின் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்காக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திமுக ஆட்சி காலத்திற்க்குள் மதுரையில் குடிநீர், பாதாள சாக்கடைக்கு போன்ற அடிப்படை பிரச்சினைகளைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும், என கூறினார்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.