பாஜகவை ஏற்கக்கூடியவர்கள் தமிழகத்தில் இல்லாததால் அந்த வேலையை ஆளுநர் பார்த்து வருகிறார் : அமைச்சர் பொன்முடி!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2023, 4:24 pm

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திடீரென செய்தியாளரை சந்தித்து பேட்டி பேட்டியளித்தார்

அப்பொழுது அவர் பேசையில் தமிழக முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளில் ஆரம்ப கல்வி வளர்சிக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறார்.

உயர்கல்வி துறையில் படிக்க மாணவர்கள் திறனை வளர்க்க நான் முதல்வன் திட்டத்தினை கொண்டு வந்திருக்கிறார். நான் முதல்வர் திட்டத்தினை சிங்கப்பூர் கல்வி அமைச்சரே பாராட்டி உள்ளார். தமிழகத்தில் கல்வி தரத்தில் வளர வேண்டும் என்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார்.

பேப்பரையாவது கவர்னர் படிக்க வேண்டும் அரசியல் வாதி போன்றும் எதிர்கட்சி போன்று பேசுவது வருந்ததக்கது எதிர்கட்சி போன்று செயல்படுகிறார்.

ஆளுநர் ஊட்டிக்கு துனை வேந்தர்களை அழைத்து அரசியல் பேசுவதற்காக சென்றிருக்கிறார். அதற்கு அவர் தனியாக சென்றிருக்கலாம் என்றும் தமிழ் நாட்டில் எப்படி கல்வி வளர்ச்சி தரம் குறைந்து விட்டது என்று கூறுகிறார் அவர் எத்தனை கல்லூரிகளுக்கு சென்று ஆய்வு செய்திருக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்

தமிழகத்தை பொறுத்த வரை இரு மொழிக்கொள்கை தான் ஆளுநர் இருந்த மாநிலத்தில் தாய்மொழியையே சரியாக படிக்காதவர்கள் உள்ளனர்.

படிப்பாடியாக எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம் பீகார் மாநிலத்தில் எப்படி கல்வி தரம் உள்ளது என்பதை அவர் பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பாஜகவை ஏற்பவர்கள் இல்லை அதனால் தான் ஆளுநர் மூலமாக கொண்டு வருவதற்கு முயற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்…

தொழிற்சாலை பெருக வேண்டும் என்பதால் தான் வெளிநாடுகளுக்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டு இங்குள்ள சூழல் அவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக அவர் பயணம் மேற்கொண்டார் இதையெல்லாம் பாராட்டவில்லை என்றாலும் இதை அரசியல் செய்வார் என எதிர்பார்க்கவில்லை என கூறினார்.

ஊட்டியில் குளிர் இருப்பதால் அவர் அங்கு சென்றுள்ளார் அவர் சென்ற பிறகு சென்னையில் மழை பெய்துள்ளது என கிண்டலாகவும் கேலியாகவும் சிரித்தபடி பேசினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 442

    0

    0