காரில் வந்த திமுக அமைச்சரை முற்றுகையிட்ட விசிக முக்கிய நிர்வாகி : வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 2:45 pm

காரில் வந்த திமுக அமைச்சரை முற்றுகையிட்ட விசிக முக்கிய நிர்வாகி : வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் இந்துக்களுக்கான மயானத்திற்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் இன்று காலை தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எரிவாயு தகன மேடை அமைப்பதற்கானபூமி பூஜையை மேற்கொண்டார்.

நாளை மார்கழி மாதம் பிறந்து விடுவதால் அவசர அவசரமாக திடீரென்று ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கலந்து கொண்டார். பூமி பூஜை விழாவை முடித்துவிட்டு காரில் ஏற வந்த அமைச்சரை திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் சேரன் தனது வீட்டு வாசலில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறியதுடன், தனக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து இப்பகுதியில் எரிவாயு தகன மேடை அமைக்க முயற்சிக்கிறீர்கள்.

கருணாவூர் பேட்டை பகுதியில் குடியிருப்பு வாசிகள் இறந்தவர்களின் சடலங்களை புதைக்க இடம் இல்லாமல் ஏரிக்கரையில் புதைத்து வருகின்றனர். அவர்களுக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தி தராமல் எனது வீட்டின் அருகில் திடீரென்று இன்று காலை பூமி பூஜை நிகழ்ச்சி நடத்துகிறீர்கள் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் அமைச்சர் தரப்பினருக்கும். வி.சி.க.வை சேர்ந்த சேரன் தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை சிறிதும் பொருட்படுத்தாத அமைச்சர் மஸ்தான் பொதுமக்களின் நலனுக்காக சிலவற்றை செய்து தான் ஆக வேண்டும் என கூறியபடி அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 614

    0

    0