‘உங்க இஷ்டத்துக்கெல்லாம் பண்ண முடியாது’… திமுக MLA-வை விளாசிய பட்டுக்கோட்டை டிஎஸ்பி ; தீயாய் பரவும் ஆடியோ

Author: Babu Lakshmanan
12 June 2023, 2:30 pm

தஞ்சை ; மண் அள்ளுவதில் விதிகளை மீறிய விவகாரத்தில் திமுக எம்எல்ஏவை பட்டுக்கோட்டை டிஎஸ்பி விளாசிய ஆடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திட்டக்குடி கிராமத்தில் உள்ள குளத்தில் மண் அள்ளுவதில் விதிகளை மீறி எடுத்ததாகவும், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் மண் அள்ளியதாக லாரிகளை பட்டுக்கோட்டை போலீசார் சிறைபிடித்தனர். இதை அறிந்த திமுக எம்எல்ஏவும், மாவட்ட செயலாளருமான அண்ணாதுரை, பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாலாஜியை தொடர்பு கொண்டு, தாசில்தாரிடம் பேசி பிரச்சனையை முடித்துக் கொண்டதாக கூறியுள்ளார்.

எனவே, சிறைபிடித்த வாகனங்களை விடுவிக்குமாறும், மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என்று முதலில் சாதுவாக கூறியுள்ளார். ஆனால், டிஎஸ்பி பாலாஜி, விஷயம் மேலிடம் வரை சென்று விட்டதால், வாகனங்களை விட முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், கொதித்து போன திமுக எம்எல்ஏ அண்ணாதுரை, சட்டம் எல்லாம் எங்களுக்கும் தெரியும்.. உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள், எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், திமுக எம்எல்ஏ அண்ணாதுரை டிஎஸ்பியிடம் பேசிய ஆடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!