குடிபோதையில் தாக்கிய திமுக தொண்டர் : தாக்குதலுக்குள்ளான திமுக எம்எல்ஏ செய்த செயல்…!!
Author: Babu Lakshmanan15 July 2022, 3:36 pm
விளாத்திகுளம் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரை, குடிபோதையில் தாக்கிய திமுக தொண்டர் மீது – நடவடிக்கை வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட எம்எல்ஏ பெருந்தன்மையுடன் விட்டுச் சென்றுள்ளார்.
கர்ம வீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வே.பாண்டியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த ஆளுங்கட்சியைச் சேர்ந்த (திமுக) விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை, தருவைக்குளத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் அதிர்ஷ்டராஜ் என்பவர் குடிபோதையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனை முதுகில் அடித்த திமுக தொண்டருக்கு எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். பின் தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் குடிபோதையில் இருந்த அதிர்ஷ்டராஜை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், “அவரை குடிபோதையில் அடித்த அதே கட்சியைச் சேர்ந்த திமுக தொண்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெருந்தன்மையோடு தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அங்கு அமைந்துள்ள காமராஜரின் திருவுருசலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திச் சென்றார்.