திமுக எம்எல்ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்து : செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது நிகழ்ந்த சோகம்..!!!

Author: Babu Lakshmanan
28 July 2022, 4:43 pm

ஈரோடு : அந்தியூர் திமுக எம்எல்ஏ சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தியூர் சட்டப்பேரவை தொகுதி திமுக எம்எல்ஏவான ஏஜி வெங்கடாசலம், தமிழக அரசின் மாற்றுத்திறனாளி நல வாரிய தலைவராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து சென்னை செல்வதற்காக அந்தியூரிலிருந்து பவானி வழியாக ஈரோட்டிற்கு காரில் தனது உதவியாளருடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பவானி அருகே வாய்க்கால் பாளையம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. அந்த சமயம் எதிர்பார்க்காத விதமாக, கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், எம்எல்ஏ ஏஜி வெங்கடாசலம் கை முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதேபோல, உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?