அண்ணாமலை ஜெயிலுக்கு போனால் பாஜக காலி… என்னுடன் விவாதிக்க தயாரா..? திமுக எம்.எல்.ஏ. சவால்

Author: Babu Lakshmanan
26 January 2023, 3:02 pm

இந்து மதத்தற்கு எதிராக கட்சி பாஜக தான் என்றும், அண்ணமாலை சிறைக்கு சென்றால் பாஜக இல்லமால் போய் விடும் என்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற மொழிபோர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி எம்.எல்,ஏ மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் திமுக சார்பில் மொழிபோர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு பேசுகையில் இந்த நாட்டில் என்ன இறையாண்மை இருக்கிறது. என்ன சுதந்திரம் இருக்கிறது. நாங்கள் ஒரு குற்றச்சாட்டை கூறினால் மிரட்டுகிறார்கள், அரட்டுகிறார்கள், எங்களை மிரட்ட முடியாது நாங்கள் பயந்தவர்கள் கிடையாது. காங்கிரஸ் கட்சியினர் தவறு செய்தாலும் எதிர்க்கிறோம்.

எப்பொழுது எல்லாம் இந்த தேசத்திற்கும், மொழிக்கும், இனத்திற்கும் அச்சம் வருகிறதோ, அப்போது திமுக துணிந்து எதிர்த்துள்ளது இதுவரலாறு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்னோடு ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்றால் நான் விவாதிக்க தயராக உள்ளேன். கிறிஸ்துவம், பௌத்தம், இஸ்லாமிய மாதங்கள் வரக்காரணம், கோவிலுக்கு அனுமதிக்கவில்லை என்பதால் தான் . இந்து மதத்தற்கு எதிராக கட்சி பாஜக தான். அனைத்து மக்களும் இறைவனை வழிபட வேண்டும் என்று கூறுகிறோம்,ஆனால் நீங்கள் 4 பேரும் மட்டும் வழிபட வேண்டும் கூறுகிறார்கள்.

யார் பொது ஜன எதிரி என்பதனை மக்கள் மன்றத்திற்கு விடுகிறேன். மொழி, இனத்தினை மதிக்க தெரிய வேண்டும், அண்ணாமலை ஐ.பி.எஸ் படித்துள்ளார் என்பதால் கெட்டக்காரதனம் பண்ண முடியுமா? மத்திய சட்ட அமைச்சர், அண்ணமாலை ஆகியோர் என்னை சிறையில் அடைப்பதாக தெரிவித்துள்ளனர். நான் விளாத்திகுளம் வாக்காளர்கள் மனசிறையில் அடைபட்டுள்ளேன், அதில் இருந்து என்னால் மீளமுடியவில்லை, என்னை சிறையில் அடைத்தால் வீட்டில் உள்ள புத்தகங்களை படிக்க கிடைத்த வாய்ப்பாக கருதுவேன், என்னை சிறையில் அடைந்தால் அங்கு ஒரு பல்கலைக்கழகம் வரும், ஆனால் அண்ணாமலையை சிறையில் அடைத்தால் பா.ஜ.க இல்லமால் போய்விடும், என்றார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!