அரசு பேருந்து ஓட்டிய திமுக எம்எல்ஏ : 8 ஆண்டுகளாக பேருந்து இல்லாத வழித்தடங்களில் புதிய சேவை துவக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan24 January 2022, 12:42 pm
விழுப்புரம் : கடந்த 8 ஆண்டுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏழு புதிய வழித்தடங்களில் அரசு பேருந்தை ஓட்டி சேவையை தொடங்கி வைத்த திமுக எம்எல்ஏ லட்சுமணன்.
விழுப்புரத்திலிருந்து வளவனூர், விழுப்புரத்திலிருந்து சின்ன மடம், விழுப்புரத்திலிருந்து கீழ்பெரும்பாக்கம், வரையிலான நகரப்பேருந்து, விழுப்புரம் – பூசாரிப்பளையம், விழுப்புரம் – தென்குச்சிப்பாளையம் உள்ளிட்ட 7 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவையை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற விழாவில் இன்று விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ லட்சுமணன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்தி கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி விழுப்புரம் எம்.எல்.ஏ லட்சுமணன் சிறிது தூரம் அரசு பேருந்தை ஓட்டி இயக்கி வைத்தார்
.
கடந்த 8 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 7 வழித்தடங்களில் மீண்டும் திமுக ஆட்சி வந்த பிறகு பேருந்து இன்று இயக்கி வைக்கப்பட்ட முதல் நாளில் ஏராளமான பயணிகள் மகிழ்ச்சியுடன் சென்றனர்