போட்டோவுக்கு போஸ் கொடுக்காம எங்க கஷ்டத்தை கேளுங்க ; மக்கள் கேள்வி.. ஓட்டம் பிடித்த திமுக எம்எல்ஏ!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2024, 4:59 pm

போடோவுக்கு போஸ் கொடுக்காமல் எங்க கஷ்டத்தையும் கவனியுங்க என மக்கள் சரமாரிக் கேள்வி கேட்டதால் திமுக எம்எல்ஏ ஓட்டம் பிடித்தார்.

மதுரையில் நேற்று ஒரு மணி நேரம் பெய்த மழைக்கு மதுரை நகர் பகுதி முழுவதும் சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி 27 வது வார்டு வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் பெரியார் வீதி வாஞ்சிநாதன் தெரு போஸ் வீதி காமராஜர் தெரு உள்ளிட்ட பிரதான சாலை முழுவதிலும் செல்லூர் கண்மாய் முழுவதில் நிரம்பி பந்தல்குடி கால்வாயில் செல்லும் மழை நீர் முழுவதும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்ததால் குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் மூழ்கி சென்னை பள்ளிக்கரணை போல காட்சியளித்தது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவியர் சிரமப்பட்டு வந்த நிலையில் சாலைகளில் வானங்களை ஓட்ட முடியாமல் பொதுமக்களும் திணறினர்.

அந்த வழியாக சென்ற திமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ தளபதியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட அப்பகுதியை சேர்ந்த பெண்கள். ஓட்டு கேட்க மட்டும் வாரிங்க, இப்ப எங்க பகுதி முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது.

இறங்கி வந்து பாருங்க வாங்க என ஆக்ரோஷத்துடன் எம்எல்ஏ வை அழைத்தனர். இந்த இடத்தை விட்டு போனால் போதும் என நினைத்த எம்எல்ஏ , வாகன ஓட்டுனரிடம் வண்டியை எடுக்க சொல்லி கூறி, அந்த இடத்தை விட்டு சென்றார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி
  • Close menu