ஆண்கள் எல்லாம் கையில் வாங்கிக்கோ.. அடம்பிடித்து பெண்ணுக்கு ஜாங்கிரி ஊட்டிய திமுக எம்எல்ஏ.. அரசு நிகழ்ச்சியில் கலகலப்பு..!!

Author: Babu Lakshmanan
7 July 2023, 9:25 pm

ஆண்களுக்கு மட்டும் கையில் ஜாங்கிரி பெண்ணுக்கு அடம்பிடித்து திமுக எம்எல்ஏ ஊட்டி விட்ட சம்பவம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காட்டுப்பாக்கம் ஊராட்சியில் செந்தூர்புரம் சாலை சீரமைக்க வேண்டும் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என நீண்ட கால கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் ரூ.3 கோடியே 63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அதற்கான பணி துவக்க விழா இன்று காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது.

இதில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி வந்த பிறகு பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஆனால் காட்டுப்பாக்கம் ஊராட்சியில் அதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி வகித்து வருவதால், எந்தவித பணிகளையும் செய்யவிடவில்லை என்றும், அவர்களும் செய்யவில்லை எனவும், அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது குற்றம் சாட்டினார்.

பின்னர், நிகழ்ச்சி முடிந்த நிலையில் அனைவருக்கும் இனிப்பை கொடுத்தார். அப்போது கட்சி நிர்வாகிகளான ஆண்களுக்கு ஜாங்கிரியை கையில் கொடுத்த அவர், அங்கிருந்து கட்சி நிர்வாகி பெண் ஒருவரை அழைத்து ஜாங்கிரியை கையில் கொடுக்காமல் அவருக்கு வாயில் ஊட்டுவேன் என அடம்பிடித்து ஊட்ட முயற்சித்தார்.

ஆனால் அந்த பெண் வேண்டாம் என்று கூறிய நிலையிலும், வாயில்தான் ஊட்டுவேன் என அடம்பிடித்து அந்த பெண்ணிற்கு மட்டும் வாயில் இனிப்பை ஊட்டினார்.

இதனால் ஆண்களுக்கு மட்டும் கையில் ஜாங்கிரி கொடுத்த எம்எல்ஏ பெண்ணிற்கு மட்டும் வாயில் ஊட்டிய நிகழ்வு அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு சிரிப்பலை எழுந்தது. மேலும், நசரத்பேட்டை வழியாக வரக்கூடிய தண்ணீரை சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் தேங்கும்படி கால்வாய் அமைத்ததாக கூறுவதற்கு பதிலாக, சிக்கராயபுரம் ஏரி என தவறுதலாக கூறினார். இதனால் சிக்கராயபுரத்தில் இருப்பது கல்குவாரியா..? ஏரியா..? என கட்சி நிர்வாகிகள் குழம்பி நின்றனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 335

    0

    0