ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு மின்சாரம் திருட்டு… அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரில் நடந்த அவலம்!!

Author: Babu Lakshmanan
7 July 2023, 9:58 pm

கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்த நிகழ்வுக்காக ரேஷன் கடைக்கு சட்டவிரோதமாக மின்சாரம் திருடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், ஏமூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஏமூர் புதூர் பகுதியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 16 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, நியாய விலை கடையை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

புதிய நியாய விலை கடை கட்டுமான பணி முடிந்து, தற்போது வரை மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், திறப்பு விழாவிற்காக கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கடைக்கு பின்புறம் அமைந்துள்ள மின் கம்பத்திலிருந்து, சட்டவிரோதமாக கேபிள்களை மாட்டி மின்சாரத்தை எடுத்துள்ளனர்.

மேலும், நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நியாய விலை கடை பெயர் பலகை வண்ணம் பூசும் பணியில் ஊழியர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!