உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும்… திருச்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்… முடிவெடுப்பாரா முதலமைச்சர் ஸ்டாலின்..?

Author: Babu Lakshmanan
30 May 2022, 4:30 pm

திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயற்குழுக் கூட்டம், திருச்சி தெற்கு மாவட்டக் கழக அலுவலகத்தில் தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர், தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளருமான , அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஜூன் 3ம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக மாவட்ட அலுவலகத்தில் கழககொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, கழக ஆக்கப்பணிகள். குறித்தும் ஆலோசிக்கப்பட்டது மேலும், சிறப்பு தீர்மானமாக சட்டமன்ற உறுப்பினரும் மாநில இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டுமென ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோஇருதயராஜ் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன், கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன் மற்றும் மாநில, மாவட்டக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய,பகுதி, நகர,பேரூர் கழக செயலாளர்கள், அனைத்து மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 770

    1

    0