கள்ளக்குறிச்சி அருகே திமுக எம்எல்ஏ போக்குவரத்து துறை அதிகாரியை பார்த்து அரசு விழாவில் லூசு என திட்டியதால் அதிகாரிகள் முகம் சுழித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் பகுதியில் மக்களை தேடி மனுக்கள் பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன் மற்றும் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய திமுக எம்எல்ஏ உதயசூரியன், போக்குவரத்து துறை சார்பாக பேருந்துகள் விட கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கான கோப்புகள் தயார் செய்யப்பட்டு விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார். உடனே அந்த சம்பந்தப்பட்ட அதிகாரி எங்கு இருக்கிறார்..? இருக்கிறாரா..? என கூட்டத்தில் கேட்க, போக்குவரத்து துறை அதிகாரி ஆறுமுகம் என்பவர் இருக்கிறேன் என கீழே இருந்து தெரிவித்தார்.
அப்போது மற்றொரு பக்கம் இருந்து வந்த போக்குவரத்து துறை அதிகாரி இதோ இருக்கிறேன் என மேடைக்கு வந்தார். உடனடியாக அவருக்கு மேடையில் அமர சேர் குடுடா என கட்சிக்காரரை பார்த்து தெரிவித்த நிலையில், கீழிருந்த போக்குவரத்து துறை அதிகாரியை லூசு என திட்டியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், மேடையில் அமர்ந்திருந்த மற்ற துறை அதிகாரிகள் முகம் சுழிப்புடன் வருத்தம் ஏற்பட்டது.
இதுகுறித்து நாம் விசாரிக்க பொழுது தான் தெரியவந்தது, கீழிருந்து போக்குவரத்து துறை அதிகாரி ஆறுமுகம் சங்கராபுரம் பணிமனை அதிகாரியாக இருந்தவர். இந்தக் கூட்டம் நடைபெறும் இடம் சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட பகுதி என்பதால் இதோ இருக்கிறேன் சார், என தெரிவித்தார். ஆனால் மேலே அமரவைக்கப்பட்டவர் கள்ளக்குறிச்சி பணிமனை 2 அதிகாரி சிவசங்கரன் (BM) ஆவார்.
கூட்டத்தில் எத்தனை அதிகாரிகள் எந்தெந்த பகுதிக்கு உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள் என்பது கூட யோசிக்காமல் எம்எல்ஏ இதுபோன்று போக்குவரத்து துறை அதிகாரியை லூசு என அநாகரிகமாக திட்டியது வருத்தம் அளிப்பதாக சில அதிகாரிகள் புலம்பிச் சென்றனர். எம்எல்ஏ உதயசூரியன் கலந்து கொள்ளும் கூட்டத்தில் எல்லாம் இதுபோன்று கட்சிக்காரர்கள், மற்றவரை பார்த்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்தி மரியாதையாக பேச வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.